கோவில் பூசாரியை கொலை செய்த மர்மநபர்கள்.. அச்சத்தில் கிராம மக்கள்

கொலை - மாதிரி படம்

திருமங்கலம் அருகே கோவில் பூசாரி ஓட ஓட வெட்டி படுகொலை மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோவில் பூசாரியை மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்  முத்துவைரன்(42)இவர் தும்மக்குண்டு வைரவன் கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் முதல் மனைவி பாலசரஸ்வதி இறந்துவிட்டார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணான உமா மகேஸ்வரியை 2 பெண் குழந்தைகளுடன்  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

  Also Read: 3 திருமணம்.. வரதட்சணை பணத்தில் ஜாலி வாழ்க்கை - வங்கி பணியாளரை கம்பி எண்ண வைத்த முதல் மனைவி

  இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பன்னீர்குண்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முத்து வைரனை மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்ட முயன்றனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மர்ம நபர்கள் முத்து வைரனை துரத்தித் துரத்தி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் .கொலை செய்தவர்கள் யார், என்ன காரணத்திற்காக வெட்டிக் கொலை செய்தனர் என்பது குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கோவில் பூசாரியை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: சிவக்குமார் தங்கையா  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: