முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை ஆட்டுச் சந்தையில் குவிந்த வியாபாரிகள்.. காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகளால் தொற்று பரவும் அபாயம்..

மதுரை ஆட்டுச் சந்தையில் குவிந்த வியாபாரிகள்.. காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகளால் தொற்று பரவும் அபாயம்..

ஆட்டுசந்தை

ஆட்டுசந்தை

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆட்டுச்சந்தையில், ஏராளமானோர் கூடுவதால், கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில், சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை, திருமங்கலத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழக்கமாக செயல்படும் ஆட்டுச்சந்தை, இன்றும் கூடியது. ஆடு விற்கவும், வாங்கவும் ஆயிரக் கணக்கானோர் திரண்டனர். இந்த சந்தை, தென்மாவட்டங்களில் முக்கியமானதாக விளங்குவதால், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை புரிந்தனர்.

சந்தைக்கு வந்தவர்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்தவித விதியையும் முறையாக பின்பற்றவில்லை. நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பதால், சந்தையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க... Madurai Malli : புதிய கட்டுப்பாடுகளால் குப்பைக்கு போகும் மதுரை மல்லி... பெரும் வேதனையில் விவசாயிகள்

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவதால் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வார்கள் என்று தெரிந்திருந்தும் கூட நகராட்சி அதிகாரிகள் ஆட்டுச்சந்தையை மூடாதது பொது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆட்டுச் சந்தையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றியும், முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமலும் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் திருமங்கலம் பகுதியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona spread, CoronaVirus, Madurai, Thirumangalam