ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி

மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறை

மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறையில் கார்த்திக்கை சந்திக்க உறவினர்கள் யாரும் வராத காரணத்தினால் மன உளைச்சல் ஏற்பட்டு சிறையில் அவர் தங்க வைக்கப்பட்ட இடத்துக்கு பின்புறம் கழிவறைக்கு அருகில் சிறிய கண்ணாடித் துண்டு இருந்ததாகவும், அதை எடுத்து விழுங்கியதாகவும் அதிகாலை 4 மணிக்கு தெரிவித்துள்ளார்.

Also read... தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் அடித்துக்கொலை

அதனை தொடர்ந்து கார்த்திக் (எ) காட்டு ராஜாவுக்கு  சிறை உள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில், தொடர்ந்து வயிறு வலிப்பதாக கூறியதால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காலை 7 மணிக்கு  அழைத்து வரப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai, Madurai Central Jail