Home /News /tamil-nadu /

பள்ளி மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய சகோதரிகள் - போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய சகோதரிகள் - போக்சோ சட்டத்தில் கைது

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்த சகிதா பேகம் மற்றும் அவரது சகோதரி உறவு முறையான வகிதாபானு இவர்கள் இருவரும் மேலூரில் உள்ள  துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், துணிக்கடை அருகே குடியிருக்கும் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி (ஓரினச்சேர்க்கை)  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
மேலூரில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்த சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்த சகிதா பேகம் மற்றும் அவரது சகோதரி உறவு முறையான வகிதாபானு இவர்கள் இருவரும் மேலூரில் உள்ள  துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், துணிக்கடை அருகே குடியிருக்கும் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி (ஓரினச்சேர்க்கை)  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் ரமாராணி, சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த சகிதாபேகம் மற்றும் அவரது சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துடன், இருவரையும் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த மேலும் விசாரணையில், சிறுமியின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுதொடர்பாக மேலூர்  காவல்துறையினரிடம் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டதில், நகையை சிறுமி எடுத்து சகிதா பேகத்திடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், அவரை பிடித்து விசாரித்தபோது, சகிதா பேகத்தின் செல்போனில் சிறுமியுடன் திருமணம் செய்துகொண்ட  புகைபட காட்சிகள் மற்றும் சிறுமியுடன் அந்தரங்கமாக இருக்கும் புகைப்படகாட்சிகள் இருந்தது தெரியவந்துள்ளது.

Also read... ஆளுநர் கூட்டியுள்ள மாநாட்டில்  துணை வேந்தர்கள்  மொபைல் போன் கொண்டு செல்ல தடை..!

இதன் அடிப்படையிலேயே சிறுமியை இவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி, குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது.  மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரி வகிதாபானுவையும் தற்போது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Madurai, Pocso

அடுத்த செய்தி