மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு சீல்
மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு சீல்
சிகரெட் வடிவில் சாக்லேட்
மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயரிப்பதாகவும், ஊசி போடும் சிரஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மதுரை செல்லூர் ஜெய்ஹிந்துபுரம் முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர்.
மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயரிப்பதாகவும், ஊசி போடும் சிரஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மதுரை செல்லூர் ஜெய்ஹிந்துபுரம் முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.இதில் செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்த இரு நிறுவனங்களுக்கு சீல் வைத்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், முனிச்சாலை பகுதியில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊசி போடும் சிரஞ்சி சாக்லெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். குழந்தைகளை தவறான பாதைக்கு திசை திருப்பும் வகையிலான இதுபோன்ற சாக்லேட்டுகள் விற்பனை செய்வதை தவிர்க்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.