400 ஆண்டுகள் பழமையான புனித ஜெர்மேனம்மால் தேவாலய திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
400 ஆண்டுகள் பழமையான புனித ஜெர்மேனம்மால் தேவாலய திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
புனித ஜெர்மேனம்மால் தேவாலய திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
மதுரை அருகே ராயபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் 400 ஆண்டு பழமை வாய்ந்தபுனித ஜெர்மேனம்மால் 110ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்றனர்.
மதுரை அருகே 400 ஆண்டுகள் பழமையான புனித ஜெர்மேனம்மால் தேவாலயத்தின், கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதுரை அருகே ராயபுரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் 400 ஆண்டு பழமை வாய்ந்தபுனித ஜெர்மேனம்மால் 110ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்த புனித ஜெர்மேனம்மாள் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினத்திற்கு அடுத்த வெள்ளி இரவு கொடியேற்றம் நடைபெறும் அதனை தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்தில் புனித ஜெர்மேனம்மாள் சப்பரத் திருவிழாவும் இரவு பூப்பல்லாக்கு திருவிழாவும் நடைபெறும்.
திருவிழாவில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்துவ பெருமக்கள் வந்து இரவு முழுவதும் தங்கி திருவிழாவில் பங்கேற்பது காலம் தொட்டு நடைபெறும் நிகழ்வாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது .
இந்த ஆண்டு தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களில் திருவிழா நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பெருமக்கள் திருத்தலத்திற்கு வந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.