Home /News /tamil-nadu /

மதுரையில் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை

மதுரையில் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பொது இடங்களில் அனுமதி இல்லை

தடுப்பூசி - மாதிரிப்படம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இன்று முதல் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் நியாய விலை கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள், சந்தைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த வாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஒரு வார காலம் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஒரு வார கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்ப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தியதை உறுதிபடுத்த சம்பந்தப்பட்ட நிறுவன நபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  தடுப்பூசி செலுத்தாத நபர்கள் அருகிலுள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... Chennai Power Cut: சென்னையில் இன்று (11-12-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

மேலும், இந்த நடைமுறையை கண்காணிக்க அரசின் சார்பில் மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை உள்ளிட்ட 6 துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர் எனவும் ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி