முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாத்தான்குளம் வழக்கு - போலீஸ் எஸ்.ஐக்கு ஜாமின் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

சாத்தான்குளம் வழக்கு - போலீஸ் எஸ்.ஐக்கு ஜாமின் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்

ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்

Sathankulam Case | தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக இவர்கள் 2 பேரையும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், போலீசார் தாக்கியதால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான போலீஸ் எஸ்ஐக்கு ஜாமின் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக இவர்கள் 2 பேரையும் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள், போலீசார் தாக்கியதால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகு கணேஷ், உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி எஸ் ஐ ரகு கணேஷ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரகுகணேஷ் 20 மாதங்களாக சிறையில் உள்ள நிலையில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிப்பட்டது.

Also read... அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு: நீதிபதி விடுப்பில் சென்றதால் தீர்ப்பு ஒத்திவைப்பு

top videos

    ஆனால், ரகு கணேஷுடன் பணியாற்றிய போலீசார் உள்ளிட்டோர் வழக்கின் சாட்சியங்களாக உள்ளதால் அவர் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்று கூறி ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    First published:

    Tags: Sathankulam