புரோட்டா சாப்பிடுவதற்காக காளை மாடு ஒன்று தினமும் ஹோட்டலுக்கு வந்து செல்வது வாடிக்கையாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்காவிற்குட்பட்ட பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் நடத்தி வருபவர் முருகேசன். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது ஹோட்டலுக்கு பெருங்குடி முத்தையா கோவில் காளை ஹோட்டல் முன் நின்று கொண்டிருந்தது. கோவில் காளை ஹோட்டல் முன் நின்று கொண்டிருப்பதை கண்ட உரிமையாளர் காளை மாட்டிற்கு புரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை உணவாக கொடுத்துள்ளார்.

காளை மாடு
Also Read:
அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி..
அதை உண்டு அங்கிருந்து சென்ற கோவில் காளை இந்த செயலை வாடிக்கையாக வைத்துள்ளது., தினசரி அங்கு வந்து ஹேட்டலுக்கு முன் நின்று கொண்டு உரிமையாளர் தமக்கு புரோட்டா தரும் வரை இடத்தைவிட்டு அசையாமல் காத்திருக்கிறது.
Also Read:
தேசிய விரோதிகளுக்கு எதிராக கிடுக்கிப்பிடி..!
தினந்தோறும் கோவில் காளை மாடு வருவதை புரிந்துகொண்ட ஹேட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் மீதம் உள்ள புரோட்டாகளை காளைக்கு கொடுத்து வந்தார். அதை உண்ட கோவில் காளை அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்று விடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவில் காளையின் இத்தகைய செயல் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும்., ஹோட்டல் உரிமையாளரின் மனித நேய செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.