ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாணவர்கள் தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழியை பதிவிறக்கம் செய்துள்ளனர் - மருத்துவக் கல்வி இயக்குனர் விளக்கம்

மாணவர்கள் தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழியை பதிவிறக்கம் செய்துள்ளனர் - மருத்துவக் கல்வி இயக்குனர் விளக்கம்

மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு

மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு

Madurai Medical College : சமஸ்கிருத உறுதிமொழி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர்கள் தவறுதலான உறுதிமொழியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் முதல்வரை பணியமர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கும் எனவும் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை அன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி எடுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் ஆகிய 3 பேர் கொண்ட குழு இன்று விசாரணை நடத்தியது. விசாரணையின் போது முதல்வர் ரத்தினவேல், பொறுப்பு முதல்வர், துணை முதல்வர் தனலெட்சுமி, மாணவர் பேரவை ஆகியோரிடம் எழுத்துப்பூர்வ அறிக்கை பெறப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக்கு பின்னர் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு அளித்த பேட்டியில், “மாணவர்கள், துணை முதல்வர், முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். விசாரணை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்த சமஸ்கிருத கருத்துக்கள் கொண்ட உறுதிமொழியே, தவறுதலாக சனிக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியது சுற்றறிக்கை மட்டுமே. உத்தரவு அல்ல. எனவே அதைபற்றி சுகாதாரத்துறையிடம் ஆலோசிக்காமல் அப்படியே பின்பற்றியது தவறு. பிப்ரவரி 10 ஆம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

விசாரணை

Must Read : ஃப்ரூட் மிக்ஸர் குடித்த பெண்களுக்கு வாந்தி, மயக்கம் - 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தவறுதலாக உறுதிமொழி எடுத்த பிற கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்ட போது பொறுப்பு முதல்வர் தனலெட்சுமி களத்தில் இல்லை என விசாரணையில் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கை அடிப்படையில் ரத்தினவேலை மீண்டும் முதல்வராக நியமிப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.

First published:

Tags: Madurai, Madurai Medical college students, Sanskrit