Home /News /tamil-nadu /

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் டீன் தலையீடு இல்லை : மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்

சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் டீன் தலையீடு இல்லை : மருத்துவ கல்லூரி மாணவர்கள் விளக்கம்

மாணவர் பேரவை

மாணவர் பேரவை

Madurai : மதுரை மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமையன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மதுரை மருத்துவக்கல்லூரில் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே வாசித்ததாகவும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மதுரை மருத்துவக்கல்லூரியில் சனிக்கிழமையன்று முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத கருத்துக்கள் அடங்கிய உறுதிமொழியை ஏற்ற விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அப்போது, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட உறுதிமொழியை தான் வாசித்தோம். சமஸ்கிருத வாக்கியங்களை நாங்கள் படிக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நடைமுறைபடியே நாங்கள் அப்படி வாசித்தோம். அவசர கதியில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்பதால், டீன் உள்ளிட்ட மேலதிகாரிகள் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்படவில்லை.

Also read... மே தினம் விடுமுறை அளிக்காத 303 நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தொழிலாளர் துறை அறிவிப்பு.

தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் அடிப்படையில் வாசிக்கப்பட்ட உறுதிமொழி அது. அதில் எந்தவித உள் நோக்கமும் கிடையாது.  முழுக்க முழுக்க மாணவர்கள் தயாரித்த உறுதிமொழி அது, அதில் டீன் தலையீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி