மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகள் இன்று அகற்றப்பட்ட நிலையில், மாற்று இடங்களில் மின் வசதிகளை உடனே செய்து தருமாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகின் முதல் ஷாப்பிங் மால் என அழைக்கப்படும் மதுரை புதுமண்டபத்தில் சுமார் 200 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள், தையல் கடைகள் மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் இயங்கி வருகின்றன.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தில் கலை நயமிக்க சிலைகள், சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளமையால் இதனை காட்சி பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்தது. அது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகளிடம் ஆலோசித்து, கடைகள் அனைத்தையும் புதுமண்டபம் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடம் மாற்ற இறுதி செய்யப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7.91 கோடி ரூபாய் மதிப்பில் அங்கு இரண்டு தளங்களாக கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், 2021 நவம்பர் மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. குன்னத்தூர் சத்திரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்காமலும், அனைத்து கடைகளுக்கும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தராத நிலையில், இன்று காலை கோவில் இணை ஆணையர் தலைமையில் காவல்துறை உதவியுடன் வியாபாரிகள் இல்லாமல் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
திமுகவும், அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டன - கமல் அட்டாக்
மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளதாகவும், உடனடியாக ஓரிரு நாகளுக்குள் மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.