SpiceJet : மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுத்தம்

ஸ்பைஸ் ஜெட்

கொரோனா பரவல் காரணமாக, மதுரை விமானநிலையத்திற்கு, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மறு அறிவிப்பு வரும்வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவையை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக, மதுரை விமானநிலையத்திற்கு, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மறு அறிவிப்பு வரும்வரை உள்நாடு மற்றும் வெளிநாட்டு சேவையை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை விமான நிலையத்தில், முன்னணி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இன்று முதல் மதுரைக்கு பயணிகள் வருகை, புறப்பாடு மற்றும் உள்ளூர், வெளிநாட்டு விமான சேவைகளை அந்நிறுவனத்தின் மறுஅறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நோய் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால், மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் வருகை குறைவாக இருப்பதனால் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாகவும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மறுஅறிவிப்பு வரும் வரை மதுரைக்கு தனது சேவையை வழங்கப்படாது என்றும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும், இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் மதுரையிலிருந்து 6 பயணிகள் விமான சேவைகளும், ஏர் இந்தியா விமானம் மூலம் ஒரு பயணிகள் விமான சேவையும் மதுரையிலிருந்து உள்நாட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதற்காக அறிவித்துள்ளதால் இண்டிகோ விமான நிறுவனம் மதுரைக்கு கூடுதலாக விமான சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 26 திங்கள் கிழமை (நாளை) முதல் தமிழகம் முழுவதும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    Must Read : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்

     

    கொரோனா தொற்று காரணமாக விமானத்தில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மதுரை விமான நிலையத்தில் சென்னை, ஹைதராபாத் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: