மதுரை முதல் ஷார்ஜா வரையிலான விமான சேவை நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 27ஆம் தேதி முதல் மீண்டும் மதுரை முதல் கொழும்பு விமான சேவை தொடங்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில் வரும் பிப்ரவரி 28 வரை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந்துள்ளதால் மத்திய அரசு சர்வதேச விமான சேவை தடையை நீக்க முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மதுரையில் இருந்து கொழும்புக்கு மார்ச் 27ஆம் தேதி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் இருந்து துபாய்க்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விமான சேவை இயங்கி வந்த நிலையில் தற்போது தினசரி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகளுடன் வாழ வழியின்றி தவிக்கும் 85 வயது மூதாட்டி- உணவுக்குக் கூட கஷ்டப்படும் அவலம்
மதுரையில் இருந்து ஷார்ஜாக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயங்கி வந்த நிலையில் தற்போது அந்த சேவையை நிறுத்தப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.