Home /News /tamil-nadu /

சொத்தை எழுதிவாங்கிக்கொண்டு கைவிட்ட மகன்.. நீதிமன்றம் படியேறிய மூதாட்டி - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி

சொத்தை எழுதிவாங்கிக்கொண்டு கைவிட்ட மகன்.. நீதிமன்றம் படியேறிய மூதாட்டி - அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதி

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

மனுதாரர் தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதாலும், அவர் முதியவர் என்பதாலும் அவரை மீட்க வேண்டிய தேவை இந்த நீதிமன்றத்திற்கு உள்ளது என நீதிபதி கூறியுள்ளார்.

மதுரையை சேர்ந்த மூதாட்டி தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதால் தான், தனது சொந்த மகனுக்கு எழுதிக்கொடுத்த மதுரை ஜம்புரோ புரம் பகுதியில் உள்ள சொத்தை மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனக்கு மீட்டுத்தர கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

மதுரையை சேர்ந்த பிச்சையம்மாள், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில், எனக்கு சொந்தமாக மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோ புரம் ரோடு பகுதியில் ஒரு சொத்து இருந்தது. இந்த சொத்து எனது சம்மதத்துடன் என் மகன் பெயருக்கு மாற்றப்பட்டது. தற்போது எனக்கு 69 வயதாகிறது. ஆனால் எனது மகன் என்னை முறையாக பாதுகாப்பதில்லை. எனவே என்னுடைய சொத்தை என் மகனிடம் இருந்து மீட்டுத்தரும்படி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவின் அடிப்படையில் என்னுடைய சொத்தை மீண்டும் ஒப்படைக்கும்படி கடந்த 12.11.2021 அன்று மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது வரை அந்த சொத்து என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.மாறாக, எனது மகன், மருமகள் ஆகியோர் என்னை பல்வேறு வகையில் தொந்தரவு செய்து வருகின்றனர். இதையடுத்து எனது சொத்தை மீட்டுத்தரும்படியும் எனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், தல்லாகுளம் போலீசாருக்கு புகார் மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே என்னுடைய சொத்தை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் என்னிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ALSO READ |   Save Soil : சத்குருவின் மண் காப்போம் இயக்கத்திற்கு காமன்வெல்த் நாடுகள் ஆதரவு..!
 இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் தனது சொந்த மகனால் துன்புறுத்தப்படுவதாலும், அவர் முதியவர் என்பதாலும் அவரை மீட்க வேண்டிய தேவை இந்த நீதிமன்றத்திற்கு  உள்ளது. அந்த வகையில் மனுதாரருக்கு சொந்தமான சொத்தில் இருந்து அவரது மகன், மருமகளை 4 வாரத்தில் வெளியேற்றி, சொத்தை அவர்களிடம் இருந்து மீட்டு மனுதாரரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை மதுரை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி