• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் தாயின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன் - குவியும் பாராட்டு

மதுரையில் தாயின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன் - குவியும் பாராட்டு

மதுரையில் தாயின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன்

மதுரையில் தாயின் மறுமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்த மகன்

மதுரையில் தனது தாயின் மறுமணத்துக்கு அவரது மகனே தாலி எடுத்துத் தந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் ஆதிஸ். தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த சுபாஷினி ராஜேந்திரன் என்பவரை மதுரை திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோயிலில் நேற்று மணம் புரிந்தார். மணப்பெண், ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி ஏற்கெனவே திருமணமாகி கணவரிடம் இருந்து மணவிலக்குப் பெற்றவர்.

    சுபாஷினிக்கு ஒன்பது வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார். அவரது தாய்க்கு ஆதிசுடன் திருமணம் நடப்பதை ஆமோதிக்கும் வகையில் திருமணத்தின்போது மணப்பெண் சுபாஷினிக்கு கட்டப்படவிருந்த தாலியை சிறுவன் தர்ஷன் எடுத்துக் கொடுக்க, மணமகன் ஆதிஸ் அதை கட்டினார்.



    நண்பர்களையே தங்களது உறவினர்களாகக் கொண்டு மணமக்கள் மாலை மற்றும் மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர். தனது மகனின் கையால் தாலியைப் பெற்று, தான் ஏற்றுக் கொண்ட மணமகன் மூலமாக அதனைக் கட்டிக் கொண்ட பேராசிரியை சுபாஷினியையும், மணமகன் ஆதிஸையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: