லட்சங்களை போட்டு கோடிகளை அள்ளலாம் - பங்குசந்தை ஆசைக்காட்டி கோடிகளை சுருட்டிய மோசடி கும்பல்

மதுரை மோசடி

மதுரையில் ஒரு நிறுவனம் 130 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
பங்கு சந்தையில் அதிக லாபம் சம்பாத்திக்கலாம் என மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். 

மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள பெத்தேல் நகரில் ஆன்லைன் நிதி நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் பங்குசந்தையில் அதிக பணம் சம்பாரிக்கலாம் என ஏமாற்றி மதுரை ஆனையூரை சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் இருந்து ரூபாய் 5,50,000 பணத்தை பறித்ததாக மதுரை மாநகர் பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றபுலனாய்வு பிரிவினருக்கு சரவணகுமாரை போல் 130 பேரிடம் இந்த நிறுவனத்தின் மூலம் பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Also Read:  நான் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தேன் -  முன்னாள் அமைச்சர்  வளர்மதி

மேலும்,  இந்தநிறுவனம் மூலம் 3 கோடி ரூபாய் வரையில் மோசடி நடத்திருக்கலாம் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து FLY World Shares PVT LMT என்கிற நிறுவனத்தின் மீதும்,  அந்நிறுவனத்தின் உரிமையாளர் செய்யது பாரூக், பொது மேலாளர் ஆனந்தி மணிகண்டன் மற்றும் மனோஜ் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் இந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் தங்களிடம் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: