ஜெயலலிதா திறந்த எம்.ஜி.ஆர் சிலையின் கல்வெட்டை மாற்றிய செல்லூர் ராஜு; அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு

செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர். சிலையின் அருகிலேயே ஜெயலலிதா சிலையை 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிறுவினார். அப்போது இருந்தே சிக்கல்கள் எழ துவங்கின.

  • Share this:
மதுரையில் ஜெயலலிதா திறந்து வைத்த எம்.ஜி.ஆர்.சிலையின் கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாற்றி வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே மாட்டுத்தாவணி சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் உள்ளன. இதில் எம்.ஜி.ஆர் சிலையை கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எம்.ஜி.ஆர் சிலையின் அருகேயே ஜெயலலிதா சிலையை 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிறுவியுள்ளார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் சிலையின் கீழ் உள்ள கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாற்றி உள்ளதாக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "2001 ஆம் ஆண்டு அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த போது 18 நாள் சுற்றுப்பயணமாக ஜெயலலிதா மதுரை வந்திருந்தார். அவரது உத்தரவின் பேரில் வெண்கல உலோகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை 2.75 லட்சம் ரூபாய்க்கு வாங்கி வந்து இங்கு நிறுவினேன். பின்னர் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய பராமரிப்பில் இந்த சிலை இருந்து வருகிறது. அதற்கான அரசாணையும் அப்போதே வெளியிடப்பட்டது. அதன் பின்னர், இந்த எம்.ஜி.ஆர். சிலையின் அருகிலேயே ஜெயலலிதா சிலையை 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிறுவினார். அப்போது இருந்தே சிக்கல்கள் எழ துவங்கின.

இப்போது, ஜெயலலிதா திறந்து வைத்த இந்த சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை நீக்கி விட்டு நேற்று (28.6.2021) புதிதாக ஒரு கல்வெட்டை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வைத்துள்ளார். நாங்கள் வைத்த போது, அதில் சிலை வைத்தவர்கள் குறித்த விபரங்களை குறிப்பிடாமல், கட்சி விபரங்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், இவர் அவருடைய பெயரை குறிப்பிட்டு முந்தைய தேதியிட்டு (5.12.2019) சிலை புதுப்பிக்கப்பட்டது போல காண்பித்துள்ளார். இது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க போன் செய்தால் மொபைலை அணைத்து வைத்து விட்டார். எனவே, ஜெயலலிதா திறந்து வைத்த அந்த சிலையின் கல்வெட்டை அவர் மீண்டும் வைக்க வேண்டும். இல்லையெனில் கட்சி தலைமையிடம் புகார் அளித்து அவர் மீது வழக்கு தொடர்வேன்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "மீண்டும் அந்த கல்வெட்டு வைக்கப்படும்" என்று மட்டும் பதிலளித்து முடித்துக் கொண்டார்.
Published by:Esakki Raja
First published: