முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் இருந்தால் 6 மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை அதிமுக கவுன்சிலர் வசந்தாதேவியின் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இது வரை குரல் கொடுக்காத தமிழக முதல்வர் ஸ்டாலினை திமுகவினர் தெரிவிப்பது போல் முதன்மையான முதல்வராக ஏற்க முடியாது என்றும்
முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதை தடுக்க திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர் வீட்டில் ரெய்டு, அம்மா உணவகத்தில் புகைப்படம் அகற்றுவது இது போன்ற போக்கை தமிழக முதல்வர் கைவிட்டு, 6 மாவட்ட மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் முல்லை பெரியார் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மதுரைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அந்த பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.