ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பது மனசாட்சி இல்லாத செயல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பது மனசாட்சி இல்லாத செயல் என்றும், அப்படி விற்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், கொரோனா கண்காணிப்பு அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கொரோனா மரணங்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மை அவசியம். என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரிந்தால் தான் மக்களுக்கு பயம் வரும். ஓரிரு நாளில் 18 - 45 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம், அண்டை மாநிலங்களில் இருந்து வருவது நிறுத்தப்பட்டு விட்டது தான் என பேசினார்.

Also Read: ‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிடோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’மதுரையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், மதுரைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதலாக ஆக்சிஜன், படுக்கை, மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மதுரைக்கு கூடுதலாக 500 ரெம்டெசிவிர் குப்பிகள் மருந்துகள் வழங்கப்பட உள்ளது. கூடுதலாக, ஆக்சிஜன் வசதி உள்ள 500 படுக்கைகள் சில நாட்களில் மதுரைக்கு வழங்கப்பட உள்ளது.

முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பு சரியாக ஏற்படுத்தி இருந்தால், இரண்டாம் அலையில் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. ஆனால், இப்போது செய்யப்படும் ஏற்பாடுகள் மூலம் 3 ஆம் அலை சிறப்பாக கையாளப்படும். ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பது மனசாட்சி இல்லாத செயல். அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா மரணங்களை மறைப்பது சரியானது அல்ல. கொரோனா மரணங்கள் மறைப்பு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளோம்.

கொரோனா மரணங்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மை அவசியம். என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரிந்தால் தான் மக்களுக்கு பயம் வரும். ஓரிரு நாளில் 18 - 45 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்க உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு காரணம், அண்டை மாநிலங்களில் இருந்து வருவது நிறுத்தப்பட்டு விட்டது தான் என பேசினார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: