தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன்: சீமான்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சண்முகப்பிரியா என்பவர் மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துவராக பணியாற்றி வந்தார். எட்டு மாத கர்ப்பிணியாகயான சண்முகப்பிரியா விடுப்பு எடுக்காமல் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், கடந்த  மூன்று நாள்களுக்கு முன் அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு  தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    எனினும், சிகிச்சைப் பலனளிக்காமல் சண்முகப்பிரியா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,  மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். ஈடுசெய்ய முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல இயலாது கலங்கித் தவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் நெருக்கடியான இப்பேரிடர் காலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றித் தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ள  சீமான்,  தன்னலம் என்பது துளியுமில்லாது மகத்தான மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய்த்தொற்றால் களப்பலியான சண்முகப்பிரியாவின்  மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு என கூறியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: