Home /News /tamil-nadu /

முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உறவுக்கார பெண்ணுடன் 2-வது திருமணம் -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உறவுக்கார பெண்ணுடன் 2-வது திருமணம் -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரை

மதுரை

முதல் மனைவி இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்டு 2ம் திருமணம் செய்த கணவர் செயலால் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மதுரை அருகே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வடிவமைத்து சமூக வலைதளங்களில் பரப்பி உறவினர்களை நம்ப வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது மனைவி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா (23) இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற நிலையில்
    பாலகிருஷ்ணன்  பணி நிமித்தம்  காரணமாக வெளிநாடு சென்று விட்டு கடந்த வருடம் சொந்த ஊர்  திரும்பியுள்ளார்.

    இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கணவன் கோபாலகிருஷ்ணன் தகராறு செய்து வந்ததை அடுத்து கணவருடன் கோபித்துக்கொண்டு மோனிஷா தாய் வீட்டிற்கு திரும்பி வந்து கடந்த சில மாதங்களாக பெற்றோருடன் வசித்து வருகிறார். சண்டையிட்டு சென்ற மனைவி வெகுநாட்கள் ஆகியும் தாய் வீட்டிலிருந்து வராததால் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பாலகிருஷ்ணன் வேறொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டதாக கூறப்படுகிறது.

    Also Read: சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. செங்கல்பட்டில் பரபரப்பு

    ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அதனை மறைக்க விரும்பிய பாலகிருஷ்ணன் தனது மனைவி மோனிஷா இறந்துவிட்டதாக கூறி சமூக வலைதளமான வாட்சப் மற்றும் முகநூலில் மனைவி மோனிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு தங்களது உறவினர்களை நம்பவைத்து தனது உறவுக்கார பெண் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இறந்து விட்டதாக தனது கணவர் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளங்களில் பார்த்த முதல் மனைவி மோனிஷா அதிர்ச்சியடைந்தார்.

    ALSO READ | Swiggy மேலாளர் மீது தாக்குதல் - பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

    மேலும் தனக்குத் தெரியாமல் தனது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டதை உறவினர்கள் மூலமாக அறிந்து ஆத்திரமுற்ற மோனிஷா தனது கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வடிவமைத்து  சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டதாகவும் இதனால்  கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அருகே உள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    மோனிஷாவின் புகாரை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் புகார் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டு மனைவி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வடிவமைத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கணவன்  இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : சிவகுமார் தங்கையா
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Madurai, Marriage

    அடுத்த செய்தி