Home /News /tamil-nadu /

"புகை சான்று இல்லாததால் ரூ.10,000 அபராதம்": மதுரையில் வாடகை வாகன ஓட்டுனருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

"புகை சான்று இல்லாததால் ரூ.10,000 அபராதம்": மதுரையில் வாடகை வாகன ஓட்டுனருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

"புகை சான்று இல்லாததால் ரூ.10,000 அபராதம்": மதுரையில் வாடகை வாகன ஓட்டுனருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

"புகை சான்று இல்லாததால் ரூ.10,000 அபராதம்": மதுரையில் வாடகை வாகன ஓட்டுனருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் வாடகை வாகனத்திற்கு புகை சான்றிதழ் இல்லாததற்கு 10,600 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்களுகிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மகேந்திரா வேனை எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு இயக்கி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் இராமநாதபுரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், புகை சான்றிதழ் இல்லாததால் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சாலை வரி கட்டுவதற்கு மதுரை தெற்கு போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றிருந்த போது அவருக்கு புகை சான்றிதழ் இல்லாததால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.10,600 கட்ட வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார்.

Also read: என் ஆட்ட வெட்ட போறாங்க, காப்பாத்துங்க.. ஆட்சியரிடம் புகார் தெரிவித்த சிறுமி.. அடுத்து நடந்தது என்ன?

அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே சாலைவரி செலுத்த முடியும் என தெரிவித்ததால், வேறு வழியின்றி தன்னிடமிருந்த சிறிதளவு தங்க நகையை அடமானம் வைத்து அபராத தொகையை கட்டியிருப்பதாக வேதனையுடன் வீடியோ பதிவிட்டு தனது நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய அளவு வருமானம் இன்றி தவித்து வருகின்ற நிலையில், இதுபோன்ற அபராதங்களை மேலும் மன உளைச்சல் ஏற்படுத்துகிறது என வேதனையுடன் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விளக்கம் கேட்டதற்கு, ஒவ்வொரு விதி மீறலுக்கும் அரசே அபராத தொகையினை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாது. எனவே என்ன அபராதம்  அதிகாரிகள் விதித்தனரோ, அதை கட்டித்தான் ஆகவேண்டும் என கூறினார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி