Home /News /tamil-nadu /

மதுரை மயான ஊழியர்களுக்கு பாராட்டு விழா - ஆயுள் காப்பீடு அளித்து கவுரவித்த ரோட்டரி சங்கம்

மதுரை மயான ஊழியர்களுக்கு பாராட்டு விழா - ஆயுள் காப்பீடு அளித்து கவுரவித்த ரோட்டரி சங்கம்

madurai

madurai

Madurai: மதுரை மயான ஊழியர்களுக்கு பாராட்டு விழா - ஆயுள் காப்பீடு அளித்து கவுரவித்தது ரோட்டரி சங்கம்

கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான உடல்களை சிறப்பாக கையாண்ட மதுரை கீரைத்துறை 'அஞ்சலி' மின் மயான ஊழியர்களை கவுரவிக்க நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர்களுக்கு தங்க காசுகளும், ஆயுள் காப்பீடும் அளிக்கப்பட்டது. 

மதுரை கீரைத்துறை பகுதியில் ரோட்டரி மிட் டவுன் என்ற அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வரும் அஞ்சலி - மின் மயானம் அதன் அடிப்படையான இயல்பில் இருந்து மாறுபட்டு ஒரு மயானம் அளிக்கும் அச்ச உணர்வையும், எதிர்மறை மன நிலையையும் மழுங்கடிக்கும் வகையில் பசுமை சூழ் வளாகமாக இயங்கி வருகிறது.
இங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் நிலவும் தூய்மையும், நேர்மையும் மக்களிடம் அந்த மயானம் குறித்த நன்மதிப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்திருக்கிறது.

ரோட்டரி கிளப் தலைவர் மதன் வழிகாட்டுதலில்13 ஊழியர்களை மட்டும் வைத்து கொரோனா காலங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 உடல்கள் என மொத்தம் பல்லாயிரக்கணக்கான உடல்களை பாதுகாப்பாக கையாண்டு தகனம் செய்து சாதித்திருந்தனர்.

அந்த ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி மிட் டவுன் சங்கமும் இணைந்து பாராட்டு விழா நடத்தியது.

விழாவில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கோவல் அறக்கட்டளை செயலாளர் டாக்டர்.வெங்கடேஷ், ரோட்டரி மிட் டவுன் சங்க தலைவர் மதன் ஆகியோர் பங்கேற்று மயான ஊழியர்களின் மகத்தான பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

ஊழியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, 45 கிராம் தங்க காசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், முதல் முறையாக மயான ஊழியர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு திட்டத்தையும் தனது சொந்த செலவில் அளித்து ரோட்டரி மிட் டவுன் கிளப் ஊழியர்களின் உழைப்புக்கு உச்சபட்ச அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி