முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார்: உசிலம்பட்டியில் அதிமுக எம்.எல்.ஏ. சாலை மறியல்

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார்: உசிலம்பட்டியில் அதிமுக எம்.எல்.ஏ. சாலை மறியல்

சாலை மறியல்

சாலை மறியல்

Usilampatti : உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் - சாலைமறியல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி  நகராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  24 வார்டுகளில் நாளை நடைபெற உள்ளது. நேற்றுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதல் திமுக வேட்பாளர்கள் அனைத்து வார்டுகளிலும் பணம் பட்டுவாடா செய்வதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புகாரின் அடிப்படையில் காவல்துறையும் தேர்தல் அதிகாரிகளும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உசிலம்பட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் மதுரை- தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டதால் நகரின் முக்கிய பகுதியான மதுரை - தேனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலைை மறியல் குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி காவல்துறையினர் மற்றும்  காவல்துறை ஆய்வாளர் விஜயபாஸ்கரன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட எ.ம்எல்.ஏ. அய்யப்பனிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.

Must Read : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது வேட்பாளர்கள், வாக்காளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?

அதிமுகவினரின் இந்த திடீர் சாலைை மறியல் போராட்டத்தால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் : சிவக்குமார், திருமங்கலம்.

First published:

Tags: Local Body Election 2022, Usilampatti