அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் விநியோகிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை

மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்

உயிர்காக்கும் ரெம்டெசிவர் மருந்தை அனைத்து மாவட்டங்களிலும் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மருத்துவ கல்லூரியில் இரவு பகலாக காத்திருக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
மருந்துக்காக கடந்த மே 8 ஆம் தேதி முதல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அன்றைய தினம் 500 குப்பிகள் வழங்கப்பட்ட நிலையில், நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், இன்று மருந்து வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு 12 முதல் ஆண்கள், பெண்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். மதுரை மட்டுமல்லாது விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் அதிகளவில் காத்திருக்கின்றனர்.

மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்களை காவல் துறையினர் ஒழுங்கு படுத்தி, பாதுகாப்பு விதிகளை பின்பற்ற சொல்லி அறிவுறுத்தினர். "உயிர்காக்கும் மருந்தாக பயன்படும் ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை அதிகளவில் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மக்கள், அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்தால் மக்கள் குவிவதை தடுக்க முடியும் என்றும், ஊரடங்கு காலத்தில் மிகவும் சிரமப்பட்டு மருந்து வாங்க வரும் நிலையை தவிர்க்கலாம்" என்றும் காத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க... Tamil Nadu Full Lockdown: மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கும்!உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: