• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரெம்டெசிவிர் தட்டுப்பாடு; மதுரையில் டோக்கன் வாங்கவே 3 நாட்களாக காத்திருக்கும் நிலை..

ரெம்டெசிவிர் தட்டுப்பாடு; மதுரையில் டோக்கன் வாங்கவே 3 நாட்களாக காத்திருக்கும் நிலை..

டோக்கன் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்

டோக்கன் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்

டோக்கன் பெற்ற நபர்களுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட்ட நிலையில் நாளைக்கான டோக்கன் பெற 200 க்கும் மேற்பட்ட மக்களும், நோயாளிகளும் மருந்திற்காக காத்திருக்கின்றனர்.

  • Share this:
மதுரை மருத்துவ கல்லூரியில் விநியோகிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும், நோயாளிகளும் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.

சென்னையில் மட்டும் விநியோகிக்க பட்ட ரெம்டெசிவிர் மருந்து கடந்த மே 8 சனிக்கிழமை முதல் மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மதுரை மருத்துவ கல்லூரியில் சனிக்கிழமைvயன்று 500 குப்பிகள் மட்டும் வழங்கப்பட்டன. அடுத்தநாள் ஞாயிறு அன்று விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், நேற்று ரெம்டெசிவிர் மருந்து வாங்க மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ கல்லூரியில் குவிந்தனர். அதனால் முதல் 500 நபர்களுக்கு மட்டும் மருந்து கொடுத்து விட்டு, அடுத்த 75 நபர்களுக்கு டோக்கன் வழங்கிவிட்டு மீதமுள்ள நபர்களை திருப்பி அனுப்பினர்.

இன்று (மே 11) டோக்கன் பெற்ற நபர்களுக்கு மட்டும் மருந்து வழங்கப்பட்ட நிலையில் நாளைக்கான டோக்கன் பெற 200 க்கும் மேற்பட்ட மக்களும், நோயாளிகளும் மருந்திற்காக காத்திருக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், "முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வாடகைக்கு கார் எடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இரவு பகலாக காத்திருக்கின்றோம். உணவு கிடைக்கவில்லை, கழிப்பறை வசதி இல்லை. இதில், நோய் தொற்று பரவல் இங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதோ என்ற அச்சம் உள்ளது. டோக்கன் வாங்க மட்டுமே 48 மணி நேரமாக காத்திருக்கிறோம். அதன்பின், மருந்து வாங்க மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் தவித்து வருகிறோம்.

டோக்கன் கொடுப்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக வரையறை செய்ய வேண்டும். மருந்து விநியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: