டவ்-தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

டவ்-தே புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

டவ்-தே புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

 • Share this:
  டவ்-தே புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் , பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

  தொடர்ந்து , பேரையூர் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லை என்றும்  பேரையூர் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்றும் தெரிவித்தத்தோடு, இது தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

  மேலும், கொரோனா தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் , மருந்து வசதிகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றன . ஆனால்  தற்போது இரண்டாம் அலையில் படுக்கை இல்லை , ஆக்ஸிஜன் இல்லை  என தெரிவித்த உதயகுமார்,  நேரு ஸ்டேடியத்தில் உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க செல்லும் மக்களை ஒழுங்கு படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சாட்டினார்.

  இதனால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ரெம்டெசிவிர் மருந்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கிடைக்க அரசே நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  ஆன்லைன் மூலம் பதிவு செய்து மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் முறைகேடுகள் நடைபெறாது என்றும் ஆலோசனை வழங்கினார்.

  தமிழக அரசு திறந்துள்ள வார் ரூம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என தெரிவித்த ஆர்.பி.உதயகுமார்,  “ஏற்கனவே 38 வருவாய் மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையத்தை முன்னாள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.  தகுந்த வழிகாட்டுதல், அறிவுரைகள், மருத்துவமனையில் அனுமதி உள்ளிட்டவற்றை இவை வழங்கி வந்தன. அனைத்து தகவல் தொழில்நுட்பத்துடன் அனைத்து கட்டமைப்பைக் கொண்டுள்ள இவற்றை  அரசு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்” என தெரிவித்தார்.

  டவ்-தே புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர், கொரோனா, டவ்-தே புயல் ஆகிய இரண்டு பேரிடர்களிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்தி மக்களை காக்க வேண்டும் என கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  செய்தியாளர் சிவக்குமார்..

   
  Published by:Murugesh M
  First published: