Home /News /tamil-nadu /

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது - ஆர்.பி.உதயகுமார்

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

One nation, One election : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக பொருட்கள் கொள்முதல் செய்ததில் 65% திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலத்தில், பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் நிறைவடைகிறது. இதனையொட்டி அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இருபத்தி ஏழு வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்.

  பிரச்சாரத்தை பழனியாபுரம் பகுதியிலிருந்து தொடங்கிய ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து மம்சாபுரம், ராஜாஜி தெரு, உசிலம்பட்டி சாலை சந்தைப்பேட்டை, செங்குளம் என பல்வேறு பகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது மக்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், கடந்த காலங்களில் பொங்கல் பரிசாக அதிமுக அரசு 1000 ரூபாய் மற்றும் 2,500 ரூபாயும் தரமான பொங்கல் பரிசும் வழங்கியது. ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள திமுக பொங்கல் பரிசு கொடுத்தது அதில் வழங்கப்பட்ட மண்டை வெல்லம் வீடு சென்று சேர்வதற்குள் வடிந்து கீழே விழுந்துவிட்டது. அதனைக் காணோம் என மக்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு செய்து 65% கொள்ளையடித்தது தான் திமுக அரசு ஆனால் அதிமுக அரசு திருமங்கலம் நகராட்சியை பொருத்தவரை மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது சாலை வசதி குடிநீர் வசதி மின்விளக்கு வசதி என 100% திருமங்கலத்தில் நிறைவேற்றி உள்ளதாகவும் திருமங்கலத்தின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்க திமுகவினரால் முடியாது அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இந்த உதயகுமார் தான் எடுத்து வைக்க முடியும். தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளில் வருவதாக ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது. ஆகையால் ஏதேதோ உளறி வருகிறார் எனத் தெரிவித்தார்.

  தொடர்ந்து இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய உதயகுமார் மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் செய்துள்ளதாக நேற்று மதுரை ஆனால் இக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அவர் மதுரையில் வளர்ச்சிக்காக எந்த திட்டமும் செய்யவில்லை. ஒரே ஒரு இடம்தான் செய்திருக்கிறார். அதுவும் அவருடைய தந்தை பெயரில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் எனவும், அதிமுக அரசு முதியோர் உதவித்தொகையை 1000 ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கியது. ஆனால் தற்போதைய திமுக அரசு முதியோர் உதவித் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

  Read More : வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுக்கிறார்களா? கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

  மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து செய்வதாக அறிவித்து அதனையும் ஏமாற்றிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். இதனை நம்பி மக்கள் தங்கள் கழுத்தில் காதில் இருந்ததை எல்லாம் அடகு வைத்து தற்போது முப்பத்தி ஆறு லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என அறிவித்துள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டால் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது எனக் கூறுகிறார்.

  Must Read : திமுகவினர் தோல்வி பயத்தால் வேட்பாளர்களை கடத்துகின்றனர் - சீமான் குற்றச்சாட்டு

  அதற்கு மக்கள் நாங்கள் நான்காண்டு காத்திருக்க தேவையில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உங்களை வீழ்த்த தயாராகி விட்டோம் என மக்கள் தெரிவிக்கின்றனர் எனக் கூறினார்.

  செய்தியாளர் : சிவக்குமார், மதுரை திருமங்கலம்.
  Published by:Suresh V
  First published:

  Tags: ADMK, Local Body Election 2022

  அடுத்த செய்தி