Home /News /tamil-nadu /

‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சி என மக்கள் கேட்கிறார்கள்’ - ஆர்.பி.உதயகுமார்

‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சி என மக்கள் கேட்கிறார்கள்’ - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

RB UdhayaKumar : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துபாய் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதில் தொடங்கி, செம்மொழி பாடல் ஒழிக்க வைத்தது வரை நாடகமாகவே நடந்துள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

    தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று வந்தார். அங்கே கோட்டு போட்டவாறு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், ‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என, முதலமைச்சரை மக்கள் கேள்வி கேட்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலை, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில், வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை காக்கும் வகையில், நீர்மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீட்டை பெற்று வந்தார். அப்போது ஏளனம் செய்தது திமுக. ஆனால், தற்போது துபாய் சென்று பல்வேறு குளறுபடிகளை திமுக செய்துவிட்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டினர்.

    மேலும், முதலமைச்சருக்கு துபாய் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதில் தொடங்கி, செம்மொழி பாடல் ஒழிக்க வைத்தது வரை நாடகமாகவே நடந்துள்ளது என்று குற்றம் சாட்டிய ஆர்.பி.உதயகுமார், ‘கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு’ என முதலமைச்சரைப் பார்த்து, மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    Read More : பெரியார் திடலில் வைதீக திருமணம்... அமைச்சர் சேகர் பாபுவை பாராட்டிய கே.எஸ்.அழகிரி

    5 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீட்டை பெற்று வந்துள்ளதாக கூறும் திமுக அரசு மீதும், அவர்கள் குறிப்பிட்டுள்ள கட்டிட பணிகளுக்கான முதலீட்டின் மீதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

    Must Read : ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

    மேலும், முன்னாள் அமைச்சர்களை எல்லாம் திமுக அரசு, அதிகார துஷ்பிரயோகத்தாலும், அதிகார நெருக்கடியாலும், சர்வாதிகாரத்தினாலும், அடக்குமுறையாலும் அகதிகளாக நடத்தி வருகிறது. இருந்த போதிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இன்றைக்கும் களத்தில் முதல் ஆளாக நின்று மக்கள் பணிகளை செய்து வருகின்றனர் என்றார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, MK Stalin, RB Udayakumar

    அடுத்த செய்தி