ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது மின் ஜாமின் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது.
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும், இதுவரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் போலீசார் சோதனை நடத்தியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சரண்டர் ஆக வேண்டும். அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நல்ல காரியத்திற்காகவே வருகிறார்: அமைச்சர் நாசர்
நாளை, அல்லது நாளை மறு நாள் உச்சநீதிமன்ற த்தில், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கோரிய வழக் கு விசாரணைக்கு வர உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி வழக்கை சந்திப்பார் என அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் மதுரை வீட்டில், உரிய வாரன்ட் இல்லாமல் ஏன் சோதனை மேற்கொண்டனர் என்பது குறித்து மதுரை மாவட்ட SP பாஸ்கரன், பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7 ம் தேதி ஒத்தி வைத்தது.
மேலும் படிங்க: சூரியனார் கோவில் ஆதீனம் 102 வயதில் பரிபூரணம் அடைந்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aavin, Madurai High Court, Rajendra balaji