மதுரை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 70 ஆயிரத்து 479 பேரும், இரண்டாம் தவணை 4 லட்சத்து 39 ஆயிரத்து 593 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். இதுவரை 60 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் நாளை 1400 இடங்களில் 1 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபடுவதுடன் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், நாளை நடைபெறும் 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக வாஷிங்மிஷன், இரண்டாம் பரிசாக இரண்டு நபர்களுக்கு ஆண்ட்ராய்டு போன், மூன்றாம் பரிசாக 10 நபர்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலை வேஷ்டி பரிசாக வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதே போல் ஊரக பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 24 லட்சத்து 45 ஆயிரம் நபர்களில் 60% பேர் முதல் தவணையும், 15% பேர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதில், நகர்ப்புற பகுதிகளில் 55.74% மக்களும், கிராமப்புற பகுதிகளில் 63% மக்களும் செலுத்தி உள்ளனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் 498 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 89 நபர்கள் முதல் தவணையும், 33 நபர்கள் இரண்டு தவணை ஊசிகளும் செலுத்தியவர்கள். இவர்களில் முதல் தவணை ஊசி செலுத்திய 7 நபருக்கு மட்டுமே ஐசியு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது, இரண்டு தவணை செலுத்திய யாருக்கும் ஐசியு சிகிச்சை தேவைப்படவில்லை. கடந்த இர ண்டு மாதத்தில் மட்டும் 20 நபர்கள் கொரோனா பாதித்து இறந்துள்ள நிலையில், அவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் யாரும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.