விஜய்சேதுபதியின் ‘96’ பட பாணியில் சந்தித்த காவலர்கள்.. கண்கலங்கி, கட்டிப்பிடித்து.. நெகிழ்ச்சி சம்பவம்
விஜய்சேதுபதியின் ‘96’ பட பாணியில் சந்தித்த காவலர்கள்.. கண்கலங்கி, கட்டிப்பிடித்து.. நெகிழ்ச்சி சம்பவம்
விஜய்சேதிபதியின் ‘96’ பட பாணியில் சந்தித்த காவலர்கள்
Actor Vijay sethupathy | மதுரையில் நடிகர் விஜய் சேதுபதியின் '96' பட பாணியில் 13 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்த காவலர்கள்., நினைவு பரிசு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர்.
மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே ஒரு தனியார் மஹால் "காக்கும் கரங்கள்" மூலம் 2010-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஆண், பெண்கள் என அனைவரும் தங்களது பணியில் சேர்ந்த அனுபவங்கள் உள்ளிட்டவைகளை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். காவலர் ஒருவர் தன்னுடைய காவல் முகாமில் பணியாற்றிய 12 ஆண்டுகளுக்கு பின் நினைவு கூர்ந்தார். திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காவலர் ஒருவரின் குழந்தை நடனத்தில் அனைத்து காவலர்களும் கரகோஷத்துடன் விசில் அடித்து தங்களது வயதை மறந்து கொண்டாடினர்.
காவலர்கள் அனைவரும் தங்கள் பழைய நினைவுகளை நினைவு கூறி., சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து., நிகழ்ச்சியில் பங்கு பெற்ற காவலர்களுக்கு 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு"காக்கும் கரங்கள்" மூலம் நினைவு கூறும் விதமாக நினைவுப் பரிசு மற்றும் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
13 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்த காவலர்கள் தங்களது கடந்தகால நினைவுகளுடன் கண்கலங்கி ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கலைந்து சென்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் விஜய்சேதுபதியின் ‘96’ படத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : சிவகுமார் தங்கையா
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.