• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • யூடியூபர் சிக்காவுக்கு கொலை மிரட்டல் - டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது போலீஸ் வழக்குபதிவு

யூடியூபர் சிக்காவுக்கு கொலை மிரட்டல் - டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது போலீஸ் வழக்குபதிவு

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி

டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி தனது ஆண் நண்பருடன் வந்து மதுரை மார்க்கெட் பகுதியில் வைத்து சிக்கந்தரை தாக்கியுள்ளார்.

 • Share this:
  மதுரையை சேர்ந்த யூடியுபர் சிக்கந்தரை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

  உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவித்துவர கூடிய சூழலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் சிலர் தனது குடும்ப சட்டையை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனைவைத்து கொள்ளை லாபம் ஈட்டிவரும் தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது தெரியாத அப்பாவி சமூகவலைதளவாசிகள் இவர்களின் நாடக சண்டைகளை பார்த்து சினிமா படத்தில் வரக்கூடிய காமெடி ஸ்டைலில் ரியாக்சன் அளித்து அதற்காக கமெண்டுகளையும் தட்டி விடுகின்றனர்.

  டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அங்கிருந்த சிலர் தற்போது யூடியூப் சார்ட்ஸ்,  இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலமாக  வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூகவலைதளங்களில் சண்டையிட்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையோடு தங்களது சுய வருமானத்திற்காக இது போன்று பதிவிட்டுவருகின்றனர்.தற்போது இன்னும் உட்சபட்சமாக சமூகவலைதளங்களில் இருந்த சண்டை தற்போது தெரு சண்டையாக மாறி காவல்நிலையத்திற்கு வந்துவிட்டது.

  டிக் டாக் பிரபலமான சூர்யாதேவி தனது ஆண் நண்பருடன் வந்து கடந்த 2ஆம் தேதியன்று மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் சிக்கா என்ற சிக்கந்தரை வாகனத்தில் வந்தபோது திடீரென மறைத்து தான் அணிந்திருந்த செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சிக்கந்தர் (சிக்கா) சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி மீது 4பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.இந்த புகாரை அளிக்கும் போது சூர்யாதேவி சிக்கந்தரை அடிக்கும் காட்சிகளை ஆதரமாக அளித்தார்.  காவல்துறையினர் புகாரை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுபோன்று சுயவிளம்பரத்திற்காக பொது இடங்களில் சமூகவலைதளங்களில் தனது பக்கத்திற்கு அதிகளவிற்கு வியூவ்ஸ் மற்றும் லைக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக கட்டமைப்பை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூடியூப்பர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்ற வீடியோக்களால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படகூடிய நிலை உருவாகும் நிலை உள்ளதோடு , காவல்துறையினருக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே இது போன்ற ஆபாச பேச்சுகளை பேச கூடிய யூ ட்யுப்பர்களை பப்ஜி மதனுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னுதாரணமாக வைத்து கைது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே தடுத்து நிறுத்தப்படும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

  செய்தியாளர்: வெங்கடேஷ்வரன் (மதுரை)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: