• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் ஆடு திருடியவர்களை சில மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

மதுரையில் ஆடு திருடியவர்களை சில மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

ஆடு திருடியவர்கள் சில மணி நேரத்தில் கைது

ஆடு திருடியவர்கள் சில மணி நேரத்தில் கைது

  • Share this:
மதுரையில் நள்ளிரவில் ஆடுகளை திருடிய திருடர்களை சில மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினர், ஆடுகளை மீட்டு பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

மதுரை ஆனையூர் முத்து நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரத்தினம் ஆடு மேய்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, நள்ளிரவில் 3 பேர் ஷேர் ஆட்டோவில் வந்து  வீட்டின் முன்பு கட்டியிருந்த 2 ஆடுகள் மற்றும் குட்டிகளை திருடியுள்ளனர்.

ஆடுகள் சத்தமிட்டதால் கண்விழித்து பார்த்த ரத்தினம், அவை திருடப்பட்டு செல்வதை பார்த்து  கத்தினார். அதற்குள் திருடர்கள் ஷேர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பினர்.

Also Read : தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சம் நபர்கள் காத்திருப்பு!

இதையடுத்து ரத்தினம் நள்ளிரவில் கூடல் நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். மாநகர குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் காவல்துறை தனிப்படையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மதுரையில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு ஆட்டோ மற்றும் ஆடு  திருடர்கள் பற்றிய தகவல் அனுப்பட்ட சில மணி நேரத்தில் பாத்திமா கல்லூரி அருகே சோதனைச் சாவடியில் ஆடுகளை திருடியவர்கள் பிடிபட்டனர்.அவர்களிடம் இருந்து ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு, ஆடுகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

Also Read : ஆர்.எஸ்.எஸ். தலைவர் வரும்போது அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்

விசாரணையில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராஜன்,  தினேஷ் மற்றும் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்த பின்பு மூவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: