மதுரை நீதிமன்றதில் ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

ராகுல் காந்தி

ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த முகமது ரஸ்வி, மதுரை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், நீலமேகம் மூலமாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், "டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சமூக விரோதிகளால் கற்பழிக்கப் பட்டு படு கொலை செய்ய பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது சம்பந்தமாக டெல்லி போலீசார் நான்கு பேர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப் பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்களது, வீட்டிற்கு சென்று இருந்தார். அவர் பாதிக்க பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது போல் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். அதை அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் சோசியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளார்.

பாதிக்க பட்ட சிறார்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி தோழமைகள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் பெயரையோ, புகைப்படங்களையோ, மற்றும் வீடியோக்களையோ யாரும் வெளியிட கூடாது என்று பல்வேறு சட்டங்கள் மற்றும் நீதிமன்ற  தீர்ப்புகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் மீறும் வகையில் ராகுல்காந்தி சட்டதிற்கு அப்பாற்பட்டு செயல் பட்டுள்ளார்.

அவருடைய டுவிட்டர் பக்கத்தில் 19.5 மில்லியின் பேர்கள் பின் தொடர்ச்சியாளர்களாக உள்ளனர். இவர்கள் வெளியிட்ட பாதிக்க பட்ட சிறுமியுடைய பெற்றோரின் புகைப்படத்தை கோடிக்கணக்கான  பார்த்துள்ளனர். அவருடைய கட்சிக்காரர்கள் 5000 பேர்கள் அந்த புகைப்படத்தை மறு பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம். பி. மாணிக்தாகூர், மற்றும் கே. சி. வேணுகோபால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

இவர்கள் மீதும் மறு பதிவேற்றம் செய்த நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை, அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஆளும் கட்சியினர் தலையீடு இருந்ததால் அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் என் புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ராகுல்காந்தி, மாணிக்தாகூர், கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது இளம் சிறார்கள் நீதி சட்ட பிரிவு 74, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு 23(2) மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228(A) யின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு குற்றவியல் நடுவர் பிரவீன்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: