• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: நிலைமை மாறியதால் நிலைப்பாடு மாறியது; கொள்கை மாறவில்லை.. பிடிஆர் விளக்கம்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: நிலைமை மாறியதால் நிலைப்பாடு மாறியது; கொள்கை மாறவில்லை.. பிடிஆர் விளக்கம்

 பிடிஆர் பழனிவேல்

பிடிஆர் பழனிவேல்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி யின் கீழ் கொண்டு வரும் விவகாரத்தில் வரி நிலைமை மாறியதால் தமிழக அரசின் நிலைப்பாடு மாறி உள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 250 புதிய தள்ளு வண்டிகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரும் நிலைப்பாட்டை திமுக அரசு மாற்றிக்கொண்டதா?" என முன்னாள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்...

    "பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். 2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    2001ம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலராக இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 130 டாலராக விற்பனை செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

    2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது நேர்முக வரி 55 பைசாவாகவும், மறைமுக வரி 45 பைசாவாகவும் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக நேர்முக வரியை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குறைத்து கொண்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் செஸ் வரி 10 ரூபாயாகவும், டீசல் வரி 5 ரூபாயும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாயாகவும், டீசல் வரி 31 ரூபாயாகவும் உள்ளது.

    Also read: எனக்கு கொழுந்தியாள் இல்லை.. மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா? பி.டி.ஆர் ஆவேசம்

    மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரலாம் என ஒன்றிய அரசு சொல்லவில்லை, உயர்நீதிமன்ற தீர்ப்பில் கொடுப்பட்டதை ஒன்றிய அரசு சுட்டி காட்டி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளது.

    ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை.

    பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்து உள்ளதால் மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயையும் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்?

    நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. எனவே, நிலமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம்" என கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: