ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Vaccine | மதுரையில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலைமறியல்.....

Vaccine | மதுரையில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலைமறியல்.....

Vaccine | மதுரையில் தடுப்பூசி போடப்படாததால் பொதுமக்கள் சாலைமறியல்.....

மதுரையில் கொரோனா தடுப்பூசி மையத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரையில் உள்ள இளங்கோ அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அதிகாலை 4 முதல் மையத்தின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பூசி இருப்பில் இல்லாததால், இன்று தடுப்பூசி போடப்படாது என அறிவித்தனர்.

  ' isDesktop="true" id="492967" youtubeid="whjOt0_ANV4" category="coronavirus-latest-news">

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க.. ஆந்திராவில் மனைவியை கொன்று சூட்கேசில் வைத்து எரித்த கணவன்.. சிசிடிவி வீடியோ வெளியானது...

  இதனால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரை - கோரிப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்று காத்திருந்த அனைவருக்கும் நாளைக்கான தடுப்பூசி டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Corona Vaccine, CoronaVirus, Madurai