மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கலைஞர் நினைவு நூலகம் கட்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மதுரையில் பென்னிகுக் வாழ்ந்த வீட்டை இடித்து விட்டு கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் - வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

  • Share this:
மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டவுள்ள இடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லம் உள்ளதால் கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி விட்டு கலைஞர் நினைவு நூலகம் கட்ட கூடாது என பெரியார் - வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Also read: மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க அரசு உத்தரவு

பெரியார் - வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு இராமன் கூறுகையில், "5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் கர்னல் பென்னிகுக். கரிகால சோழன் காவேரியில் கல்லணை கட்டிய போல முல்லை பெரியாற்றில் அணை கட்டியவர் பென்னிகுக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரையில் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி விட்டு நூலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பென்னிகுக் இல்லத்தை அகற்றும் முடிவை கைவிடவில்லை என்றால் 5 மாவட்ட விவசாயிகளை திரட்டி போரட்டம் நடத்தப்படும்" என கூறினார்.
Published by:Esakki Raja
First published: