ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Corona Vaccine | மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆன்லைன் முன்பதிவு

Corona Vaccine | மதுரையில் தடுப்பூசி செலுத்த ஆன்லைன் முன்பதிவு

தடுப்பூசி : எதுவாயினும் முதல் வேலையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை ஒமிக்ரானிடமிருந்து பாதுகாக்கும் முதல் வழி. மற்ற நாடுகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்பதால் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ளுங்கள்.

தடுப்பூசி : எதுவாயினும் முதல் வேலையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை ஒமிக்ரானிடமிருந்து பாதுகாக்கும் முதல் வழி. மற்ற நாடுகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்பதால் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்த www.bit.ly/regvaccinetn என்ற இணையதத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரையில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் நடைமுறை இரண்டு மையங்களில் துவங்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இளங்கோ பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்கனவே ஹெல்ப் லைன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நடைமுறையில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தால் டோக்கன் நடைமுறை மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் அதிகமான மக்கள் அதிகாலை முதல் கூட்டமாக மையத்தில் குவிந்து வந்தனர்.இதனை தடுக்கும் நோக்கில், Covid Free Madurai என்ற அமைப்பின் உதவியுடன் ஆன்லைன் முன்பதிவு சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது தவணை தடுப்பூசி

www.bit.ly/regvaccinetn என்ற இணையதத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவின் போது தடுப்பூசி தவணை முதலில் தேர்வு செய்ய வேண்டும். முதல் தவணை என்றால் பெயர், பாலினம், அலைபேசி எண், முன்னுரிமை பிரிவினர் வகை, பிறந்த தேதி, இணை நோய் விபரம், அஞ்சல் குறியீடு, அருகிலுள்ள தடுப்பூசி மைய விபரம் ஆகியவற்றை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் தவணை எனில், முதல் தவணை ஊசி செலுத்திய தேதி, தடுப்பூசி வகை ஆகிய விபரங்களை உள்ளிட வேண்டும்.இந்த பணிகள் முடிந்த பின்னர் அலைபேசி எண்ணுக்கு ஊசி செலுத்த வர வேண்டிய நேரம், நாள் உள்ளிட்ட விபரங்கள் கிடைக்கும். அதனை கொண்டு கூட்ட நெரிசல் இன்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அண்ணா நகர் அருகேயுள்ள சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஆன்லைன் முன்பதிவு நடைமுறை துவங்கப்பட்டுள்ளது.

Also Read : ஒரு தடுப்பூசி தயாரிக்க எத்தனை நாட்கள் ஆகும்? தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

முன்பதிவு செய்யும் நபர்களுக்கு ஊசிகளின் கையிருப்பின் அடிப்படையில் ஊசிகள் செலுத்தப்படும் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறையினர், இன்று தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று செலுத்தப்படவில்லை என்றும், நாளைக்கான ஊசிகள் வந்தவுடன் ஊசி செலுத்தும் பணிகள் துவங்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Corona Vaccine