ஒரே பதிவு எண்ணில் இரண்டு ஓட்டுநர் உரிமம்.. போக்குவரத்துத்துறையின் பெரும் குளருபடி!

ஓட்டுநர் உரிமம்.

குற்றச்சாட்டில் உண்மை நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மதுரையில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகன ஓட்டுநர் உரிமம் பதிவு செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விசாரணையில் உண்மை வெளிவருமா?

    இரண்டு ஆவணம் - ஆனால் ஒரே எண் ஆம்.. ஒரே எண்ணில் இரண்டு ஓட்டுநர் உரிமம்.. நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை.. இந்த குளறுபடி நடந்தது எப்படி?

    திருமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜான் தங்கதுரை என்பவருக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகன ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமத்தை புதுப்பிக்க சென்ற போது, அவரது உரிமத்தின் எண்ணில் மதுரை வசந்தா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் உரிமம் இருப்பது தெரியவந்தது.

    Also read: விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…

    அதிர்ச்சியடைந்த ஜான் தங்கதுரை அதிகாரிகளிடம் கேட்டபோது, கணினி குளறுபடியால் இப்படி நடந்துவிட்டதாக விளக்கம் அளித்தனர்.

    ஆனால் பழைய எண்ணிலேயே ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
    அதனால் மீண்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அதன் மூலம் புதிய ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார் ஜான் தங்கதுரை.

    ஆனால், இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதில் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    Also Read:  மயானத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திய பெற்றோர்!

    தமிழகம் முழுவதும் இது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வட்டாரப் போக்குவரத்து துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுமா? தவறுகள் களையப்படுமா?
    Published by:Arun
    First published: