எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக அமைச்சரை சந்திக்கவுள்ளேன் - தேனி எம்.பி ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கைக்கு இடத்தை ஆய்வு மேற்கொண்டு  இடத்தை தேர்வு செய்தால் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

  • Share this:
    டெல்லியில் அடுத்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக அமைச்சரிடம் பேச இருப்பதக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு  மதுரை வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர்  ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவரிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துமனை அமைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  இதற்கு பதிலளித்தவர், ‘
    எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன். இதுகுறித்து காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்.புதிதாக பதவியேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இதுகுறித்து டெல்லியில் அடுத்த வாரம் சந்திக்க உள்ளேன். என்றார்,

    ,மேலும் எய்ம்ஸ் வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் 2026-ம் ஆண்டு முடியும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “டெல்லியில் அடுத்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக புதிய அமைச்சரிடம் பேச உள்ளேன் எனக் கூறினார்.

    சிவகங்கை அல்லது தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்த கேள்விக்கு.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரிக்கான மாணவர் சேர்க்கைக்கு மதுரை, தேனி மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடப்பற்றாக்குறை காரணத்தினால் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாணவர் சேர்க்கைக்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இடத்தை தேர்வு செய்தால் மாணவர் சேர்க்கை நடைபெறும்.” என்றார்.

    செய்தியாளர் : சிவக்குமார் தங்கய்யா ( மதுரை)
    Published by:Ramprasath H
    First published: