• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ்18 செய்தி எதிரொலி... 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

நியூஸ்18 செய்தி எதிரொலி... 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

Youtube Video

20 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காததால் இருளில் தவித்து வந்த காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு நியூஸ்18 செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு இருளில் தவித்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜே ஜே நகரில் 50க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லையில் குடியிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட  பட்டாவில் குளறுபடி உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் வீட்டு வரி ரசீது வழங்க மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு பெற முடியாமல் இருளில் தவித்து வருவதாகவும் இரவு நேரங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளது. எனவே அரசு தங்களுக்கு மின் இணைப்பு வழங்கி தங்கள் வீட்டிற்கு வெளிச்சம் உருவாக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து இப்பகுதி மக்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கையின் வேதனையை நமது நியூஸ் 18 சேனல் மூலமாக கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதி வெளிச்சம் போட்டு காட்டியது. இச்செய்தி குறித்து தமிழக நிதி அமைச்சர் பி டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் உடன் கலந்து ஆலோசித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்களுக்கு மின்னிணைப்பு வழங்க உத்தரவிட்டார்.



    இதையடுத்து கடந்த ஒரு வார காலமாக இதற்கான பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் 6 பேரின் குடும்பத்திற்கு திங்கட்கிழமை மாலை மதுரை அரசரடி மின் வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ் பாபு தலைமையில் ஜெ ' ஜெ.நகர் காட்டுநாயக்கர் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது .20 ஆண்டு கால போராடிய மக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்கு எரிவதை கண்டு மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

    Also Read : காந்தியின் அடையாளத்திற்கு வயது 100 - அரையாடை புரட்சியை கொண்டாட தயாராகிறது மதுரை!

    தொடர்ந்து மின்னிணைப்பு வழங்கிய அதிகாரிகளை சால்வையணிவித்து கெளரவித்து நன்றி தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து நமது நியூஸ்18 சேனலுக்கு அளித்த பேட்டியில், 20 ஆண்டுகளாக மின்சார இணைப்பு பெற முடியாமல் இருளில் தவித்து வந்த தங்களுக்கு நியூஸ்18 சேனல் மூலமாக வெளிச்சம் கிடைத்துள்ளது. இதற்காக தங்களுக்கு உதவிய நியூஸ்18 சேனலுக்கும் நியூஸ் 18சேனலில் ஒளிபரப்பான செய்தி மூலமாக உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    செய்தியாளர்  : சிவகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: