மணக்கோலத்தில் வந்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய மணமக்கள்; வட்டாட்சியர் பாராட்டு!

கொரோனா நிவாரண நிதி வழங்கிய மணமக்கள்

திருமணம் முடிந்ததும், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மணமக்கள் வட்டாட்சியர் முத்துப்பாண்டியிடம் ரூபாய் 25000 ரொக்கப் பணத்தை வழங்கினர்.

 • Share this:
  ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் வழங்கிய மணமக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதிமுக அவைத்தலைவர் திருப்பதி என்பவரின் மகன் சந்தோஷூக்கும், ராஜாராம் என்பவரது மகள் ஜனனிக்கும் இன்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

  ஏற்கனவே திருமண மண்டபம் பதிவு செய்திருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக திருமண நிகழ்ச்சிக்கு அதிகமானோர் பங்கேற்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால், இவர்களின் திருமணம் தங்களது சொந்த ஊரான கட்ராம்பட்டியில் உள்ள கோவிலில் எளிமையாக நடைபெற்றது.

  இதன்மூலம் திருமண செலவு வெகுவாக குறைந்த காரணத்தால் மணமகன் சந்தோஷ் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக 25,000 ரூபாய் வழங்க முடிவு செய்தார். அதன்படி, திருமணம் முடிந்ததும், திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த மணமக்கள் வட்டாட்சியர் முத்துப்பாண்டியிடம் ரூபாய் 25000 ரொக்கப் பணத்தை வழங்கினர். பணத்தை  பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் முத்துப்பாண்டி மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  Also read: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான புதிய கட்டணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

  இந்நிகழ்ச்சியில் மணமக்களின் தந்தையர் இருவர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் ஊரடங்கு காரணமாக தங்களது திருமண செலவு வெகுவாக குறைந்ததால் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக தொகையை வழங்க முடிவு செய்து இன்று வட்டாட்சியரிடம் வழங்கியதாகவும் இது தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

  தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் நிதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். திருமண செலவில் எஞ்சிய ஒரு பகுதியை கொரோனா நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்த நிவாரணம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  செய்தியாளர் - சிவக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: