மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து

மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 • Share this:
  மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  மதுரை நத்தம் சாலையில் பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டும்பணியில் ஊழியர்கள் இன்றும் வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

  இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பது தெரியவந்துள்ளது.

  இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

  மதுரை நத்தம் சாலையில் கட்டுப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: