புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்.. மதுரையில் காய்கனிகள் தேங்கியுள்ளதாக வியாபாரிகள் வேதனை

Youtube Video

இன்று முதல் காய்கறி கடைகள் நண் பகல் 12 மணி வரை தான் செயல்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால், மதுரை மாட்டு தாவணி காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது.

  • Share this:
    கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் பகல் 12 மணி வரை தான் பலசரக்கு, காய்கறி கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பிற கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இதில் வழக்கமாக சிறு காய்கறி கடை வியாபாரிகள் மொத்தமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வார். ஆனால் இன்று முதல் நண்பகல் 12 மணிவரை தான் காய்கறி கடைகள் திறந்து வைக்க வேண்டும் என்பதால், வழக்கமாக வாங்கும் காய்கறிகளின் அளவை குறைத்து விட்டனர். இதுபோன்ற அனைத்து சிறு வியாபாரிகளும் வழக்கமாக கொள்முதல் செய்யும், காய்கறிகளின் அளவை குறைத்ததால் , மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் தேங்கி உள்ளது.

    மேலும் புதிய நேர கட்டுப்பாடு காரணமாக, காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக மளிகைக் கடைக்காரர்கள், மற்றும் பொதுமக்கள் குறைந்து காணப்பட்டனர். இதனால் அங்கு காய்கனி தேங்கி இருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.



    மேலும் படிக்க...  Ariyalur Power Shutdown : அரியலூரில் இன்று (06.05.2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

    மேலும் இதே நிலை நீடித்தால் வியாபாரிகள், விவசாயிகள் இடம் கொள்முதல் செய்யும் அளவை  குறைத்து விடுவர். எனவே விவசாயிகள் வியாபாரிகளின் நலன் கருதி காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்: கருணாகரன், மதுரை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: