• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்தவர் நன்மாறன்: படத்திறப்பு விழாவில் புகழஞ்சலி

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்தவர் நன்மாறன்: படத்திறப்பு விழாவில் புகழஞ்சலி

Nanmaran ex.MLA

Nanmaran ex.MLA

மதுரையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.நன்மாறனுக்கு,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில்  புகழஞ்சலி, படத்திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  • Share this:
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறனுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள தொல்காப்பியம்  அரங்கில் புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில், எழுத்தாளர் ஸ்ரீ ரசா தொகுத்த "மேடைக்கலைவானர் என்.நன்மாறன் நினைவுகளின் சித்திரம்" என்ற நூலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கம் சார்பில் வெளியிட்டனர்.   இவ்விழாவில், எழுத்தாளர் ஸ்ரீ ரசா தலைமை தாங்கினார்,   எழுத்தாளர் வெண்புறா, பேராசிரியர் அருணன் , மற்றும் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் என பலர் பங்கேற்றினர்.

    இவ்விழாவில், எழுத்தாளர் வெண்புறா பேசுகையில் "சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்தவர் நன்மாறன் என்றும் , ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையை மக்களிடம் எப்படி எளிமையாக கொண்டு செல்ல வேண்டும் என்று நன்மாறனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்".

    Also read:   சங்கி என்பதா? மோடிக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறுவேன் - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பதிலடி

    தொடர்ந்து பேராசிரியர் அருணன்  பேசுகையில்," அவர் எளிமையாக வாழ்ந்தார் என்பதை விட அவர் எளிமையாக பேசினார் என்றும் , மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் , மதுரையில் பெய்த மழைக்கு தான் நன்மாறன் அவர்கள் குடை பிடித்தார் என்றும் , சாதாரண மனிதனின் ரசனை தான் நன்மாறனின் ரசனையாக இருந்தது என்றும் , இலக்கியம் இல்லாத அரசியல் உரையே இல்லை என்றும் , அவர் தெரிவித்தார்".

    எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில்,  "நன்மாறன் அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும்,ஞானசம்பந்தர்,சாலமன் பாப்பையா போன்ற பேச்சாளர்கள்  ரசிக்கின்ற பேச்சாளராய் நன்மாறன் இருந்திருக்கிறார்" என்று தெரிவித்தார். விழாவில் நன்மாறன் குடும்பத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஹரி கிருஷ்ணன், மதுரை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: