மதுரை செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக தனியார் கோழி பண்ணையில் திடீரென தீப்பிடித்து நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்த பரிதாபம்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் இரண்டு கூரை அமைக்கப்பட்டு சுமார் 4500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து மின்சாரம் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாகவும் மின் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீ பற்றி மளமளவென்று எரிந்தது.
இதனால் அங்கு பணியில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர் இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.