Home /News /tamil-nadu /

மதுரையில் 'மோடி பொங்கல்' விழா ரத்து - அண்ணாமலை அறிவிப்பு

மதுரையில் 'மோடி பொங்கல்' விழா ரத்து - அண்ணாமலை அறிவிப்பு

மோடி - அண்ணாமலை

மோடி - அண்ணாமலை

Madurai Modi Pongal | கட்சி நிகழ்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு விழா குறித்து தமிழக அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றுள்ளார்.

    மதுரையில் ஜனவரி 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் 'மோடி பொங்கல்' என்ற தலைப்பில் நடைபெற இருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.

    இதனிடையே கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    Also Read : அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன - துரைமுருகன் கேள்வி.. காரசார விவாதம்

    இந்நிலையில் மதுரையில் நடைபெற இருந்த 'மோடி பொங்கல்' விழா ரத்து செய்யப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசின் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக ரத்து செய்வதாக கூறினார்.

    மேலும் கட்சி நிகழ்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு விழா குறித்து தமிழக அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த காரணத்தை கொண்டும் தள்ளிப்போக கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, Madurai

    அடுத்த செய்தி