கீழடியில் 2014ம் ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வந்த நிலையில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த 2 ஏக்கர் நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கீழடியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் சிறப்பு குறித்து அதிகாரிகள் எடுத்து விளக்கினார். அகழாய்வு பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
முன்னதாக, மதுரைக்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு, அஞ்சலி செலுத்தினார்.
மதுரை கிழக்கு தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 முறை வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றியவர் நன்மாறன். மாரடைப்பு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை, மெகபூப்பாளையம் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில், வைக்கப்பட்டுள்ள நன்மாறன் உடலுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நன்மாறனின் மனைவி மற்றும் மகன்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
முதல்வருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.